செய்திகள்

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 2வது நாளாக இன்றும் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

Makkal Kural Official

சென்னை, ஆக. 18–

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு 2வது நாளாக இன்றும் 10 நிமிடங்களில் முடிந்தது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு 17–ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் கிளம்புவார்கள். இந்திய ரயில்வேயின் முன்பதிவு காலமானது பயண 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக அக்டோபர் 16–ந் தேதி வியாழக்கிழமை செல்வதற்கான டிக்கெட் முன்பதி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய 10 நிமிடங்களில் முடிந்தது. அக்டோபர் 17ம் தேதி வெள்ளிக் கிழமைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (18–ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. நேற்று போல் இன்று 2வது நாளிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. குறிப்பாக குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் மற்றும் கோவை, பெங்களூரு செல்லும் அனைத்து ரெயில் வண்டிகளின் டிக்கெட்டுகளும் 10 நிமிடத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு (வெயிட்டிங் லிஸ்ட்) மாறியது.

அக்டோபர் 18ம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை, நாளை ஆகஸ்ட் 19ம் தேதி புக்கிங் செய்யலாம். அதேபோல, 19ம் தேதிக்கான முன்பதிவு வரும் 20ம் தேதியும், தீபாவளி நாளான, அக்டோபர் 20ம் தேதிக்கான முன்பதிவு 21ம் தேதியும் செய்து கொள்ளலாம்.

தீபாளி முடிந்து மீண்டும் அக்டோபர் 21ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) ஊர் திரும்புவதற்கு ஆகஸ்ட் 22 (வெள்ளி) முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 22ஆம் தேதி (புதன்கிழமை) பயணிக்க ஆகஸ்ட் 23 (சனி) முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *