செய்திகள்

தீபாவளிக்கு கங்கையில் குளிக்க நவ.9 இல் தென்காசி–வாரணாசி இடையே சிறப்பு ரயில்

வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 5 ந்தேதி சிறப்பு ரெயில்: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை, ஆக. 2–

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கங்கையில் குளிக்க விரும்புவோருக்காக, தென்காசி – வாராணசிக்கு இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு கங்கையில் குளிப்பதற்கான பயணம் செய்ய விரும்புவோருக்காக, தென்காசியில் இருந்து பாரத் கெளரவ் சிறப்பு ரெயில் நவம்பர் 9-ஆம் தேதி புறப்பட்டு நவம்பர் 11-இல் சென்றடைகிறது. மறுவழியில் வாராணசியில் இருந்து நவம்பர் 13 ந்தேதி புறப்பட்டு தென்காசிக்கு நவம்பர் 17-இல் வந்தடையவுள்ளது.

இந்த சிறப்பு ரெயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.

வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5 -ஆம் தேதி இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 5 -ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06031) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06032) வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பர் 6 -ஆம் தேதி காலை 8 .50 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 2) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *