செய்திகள்

தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது: எம்.எல்.ஏ.வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு

மதுரை , செப். 20–

தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.

ஜெயலலிதாவின் அருளாசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மதுரை மேற்கு ஒன்றியத்தில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிந்தாமணியில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முத்துகுமார், திருப்பங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமசந்திரன், மற்றும் காசிராமன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் கே.சி.பொன் ராஜேந்திரன், வட்டக் கழக செயலாளர்கள் கருணா, முருகேசன், செல்வம், கருத்தமுத்து, செல்லப்பாண்டி, சரவணன், முத்துக்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலூர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, மாவட்டக் கழக அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் எஸ்.அம்பலம், மாவட்டக் கழக, மாவட்ட கழக துணைச் செயலாளர் சசிகலா, மாவட்டக் கழக இணைச் செயலாளர் சரோஜா, மேலூர் ஒன்றிய கழகச் செயலாளர் கே.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் வெற்றி செழியன், மேலும் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.பி.முத்துகிருஷ்ணன், மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் கே.சி.பி.ஜெயக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேதுராமன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் பி.செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.கே.ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது;–

ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை தந்து ஒரு மகத்தான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். இங்கு நடைபெறும் இளைஞர் அணி கூட்டம் என்பது வருகின்ற 2021–ம் ஆண்டு தேர்தலுக்கான வெற்றி விழாவின் அச்சாரமாக திகழ்கிறது. இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவை 4 படைகளாக இருந்து திகழ்ந்து வருகிறது. இன்றைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது உள்ள கொரோனா வைரஸ் நோய் காலகட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி அனைவரும் பாஸ் என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அரியர்ஸ் தேர்வில் மட்டும் 7 1/2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணா இருமொழிக் கொள்கையில் திடமாக இருந்தார்.

நாடாளுமன்றத்தில் அண்ணா பேசும் போது சிலர் குறுக்கீட்டு பெரும்பாலான மாநிலங்களில் ஹிந்தி இருக்கும்போது ஏன் இந்தியை ஆட்சி மொழியாக இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணா நமது இந்தியாவில் காக்கை அதிகமாக உள்ளது.

அதற்காக தேசிய பறவையாக காக்கையை ஆக்க முடியுமா என்று பதிலளித்தது. தமிழ் மொழியில் தான் இலக்கியங்கள், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மிக்க நூல்கள் இருக்கிறது. ஆனால் ஹிந்தி மொழியில் ரயில்வே கைடு தான் உள்ளது என்று கூறினார்.

அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை பின்பற்றி இருமொழிக் கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்தது கருணாநிதி. நீட் தேர்வை காங்கிரஸ், தி.மு.க. சேர்ந்து கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்துப் போட்டது ஸ்டாலின். ஜல்லிக்கட்டை பறி கொடுத்தது தி.மு.க. இவர்கள் பறிகொடுத்துவிட்டு தற்போது எங்கள் மீது குறை கூறி வருகிறனர். எப்போதெல்லாம் மத்திய அரசின் மந்திரி சபையில் தி.மு.க. இடம் பிடிக்கும் போதெல்லாம் மாநில சுயாட்சியை பற்றி பேச மாட்டார்கள்.

ஆனால் எதிர்க்கட்சி ஆகும்போது மாநில சுயாட்சி என்று மக்களை ஏமாற்றுவார்கள். சட்டசபையில் முதலமைச்சர் நீட் தேர்வில் தி.மு.க. செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி வரலாற்றை உருவாக்கினார் முதலமைச்சர்.

கருணாநிதி வல்லவர் ஆனால் நல்லவர் கிடையாது. ஆனால் ஸ்டாலினுக்கு எழுத்துத் திறமை கிடையாது, பேச்சு பேச்சுத் திறமை கிடையாது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் குறிப்பு இல்லாமல் சட்டசபையில் பேசுகின்றனர். இதுபோன்று ஸ்டாலினால் பேச முடியுமா? இன்றைக்கு தி.மு.க. கட்சியில் உயர் பதவியில் அண்ணா தி.மு.க.வில் இருந்து சென்ற சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட யாருக்கும் உயர் பொறுப்புகளை தி.மு.க.வில் வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியில் எந்தக் குறையும் சொல்ல முடியாது எங்கேயும் மின்வெட்டு இல்லை, ஜாதி மத கலவரம் இல்லை, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட என எல்லா அடிப்படைத் தேவைகளும் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க பல்வேறு சட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.

தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. ஆனால் அண்ணா தி.மு.க.வில் அப்படி அல்ல இந்த இயக்கத்தில் சோதனை வரும் ஆனால் இறுதியில் இந்த இயக்கம் வெற்றி பெறும். இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை சிந்தி இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள் 1981, 1991, 2001, 2011, ஆகிய ஆண்டுகளில் எல்லாம் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. அதே வரிசையில் வருகின்ற 2021–ம் ஆண்டில் அண்ணா தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இளைஞர்கள் நீங்கள் அண்ணா தி.மு.க. சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இந்த வெற்றிக்கு உங்கள் பங்கு மகத்தானதாக இருக்க வேண்டும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *