சென்னை, ஜன.26–
ராஜ்பவனில் இன்று மாலை கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு தினத்தையொட்டி சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார். கவர்னர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தநிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவர்னரின் செயலாளர் நேரில் சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.
இதற்கிடையே இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ராஜ்பவனில் இன்று மாலை கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கெற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிறைவடைந்த குடியரசு தின விழாவில் கை கொடுத்து சிரித்த முகத்துடன் கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.