சென்னை, பிப்.20–
‘தி கார்னர் சீட்ஸ்’ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ராபி
(நினைவுப் பரிசு) லோகோவை நுங்கம்பாக்கம் லீ மாஜிக் லேன்ட்டன் திரையரங்கில் நடந்தது.அதில் பிரபல ஒளிப்பதிவாளர் – பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர்– வித்யா சாகர், படத்தொகுப்பாளர் – பி.லெனின், இயக்குனர் – வி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டனர்.
சர்வதேச திரைப்பட விழா என்பது சினிமாவைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், ஒரு சில திரைத்துறையினருக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே எளிதில் தெரிவதாகவும், அதிகம் அறியப்படுவதாகவும் இருக்கிறது. அதைமாற்றி சினிமாவை விரும்பும் கடைக்கோடி மாணவர்களுக்கும், சினிமா விரும்பிகளுக்கும், கனவுகளோடு பயணிக்கும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள், மற்றும் ஏனைய திரைத்துறையினர்களுக்கும் எளிதில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த ‘தி கார்னர் சீட்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா உருவாக்கப்பட்டிருக்கிறது.
உலக திரைப்படங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்க வைப்பதே நோக்கம் என்று அதன் நிறுவனர்கள் சபரிநாதன் முத்துபாண்டியன், தனா, ராஜேஷ் கண்ணா, ராகுல் ராஜேந்திரன் கூறினார்கள்.
மொத்தம் 153 நாடுகளில் இருந்து படைப்புகள் சமர்ப்பிக்கப்படுகிறது. கலைத்துறையை பயிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் தேடிச்சென்று அவர்களை இதில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் தனபாலன் கல்லூரி
மற்றும் சேலம் ஏவிஎஸ் கல்லூரி உதவியோடு அனைத்து கல்லூரியையும் பங்கேற்க வைக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
திரைப்படம், ஆவணப்படம், திரைக்கதை தொகுப்பு, மொபைல் திரைப்படங்கள், குறும்படங்கள் என்று மொத்தம் 41 பிரிவுகளில் படைப்புகள் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 4. திரைப்பட திரையிடல் மற்றும் விருது விழா ஏப்ரல்
20 –ம் தேதியில் நடைபெற இருக்கிறது.