செய்திகள்

திருவொற்றியூர் மேற்கு பகுதி அண்ணா திமுக தகவல் தொழில்நுட்ப செயலாளராக கே.கார்த்திக் நியமனம்

திருவொற்றியூர், டிச.30–

திருவொற்றியூர் மேற்கு பகுதி அண்ணா திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக கே.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கார்த்திக் பொறியியல் பட்டதாரி. மனிதவள மேம்பாட்டு உயர் கல்வியும் படித்துள்ளார். கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவருகிறார். ஏராளமான இளைஞர்களுக்கு தனது அலுவலகத்தில் கணினி பயிற்சி கொடுத்து வருகிறார் சமூக நலனில் அக்கறை கொண்டு கடந்த கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார். பின் தங்கிய பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்க உதவியுள்ளார்.

இவரை திருவொற்றியூர் மேற்கு பகுதி அண்ணா திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்து அறிவித்துள்ளனர்.

அண்ணா தி.மு.க.வினர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *