செய்திகள்

10 ஆம் ஆண்டு நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவை

Makkal Kural Official

திருப்போரூர், ஜன. 10–

திருப்போரூர் அடுத்த திருவிடந்தையில் 10வது சர்வதேச பலூன் திருவிழாவை அமைச்சர்கள் ராஜேந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் தமிழ்நாட்டில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை சென்னை மதுரை பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரைசாலை திருவிடந்தை ஊராட்சியில் 8 உலக நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் 10வது சர்வதேச பலூன் திருவிழா இன்று காலை துவங்கியது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் பலூன் திருவிழா இன்றிலிருந்து, 12ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பலூன் திருவிழாவை துவக்கி வைத்தார்கள்.

நிகழ்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், துணை ஆட்சியர் நாராயணர் சர்மா, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல் இதயவர்மன் திருக்கழுகுன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் விடிஎம் தமிழ்மணி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் எம்.சேகர் திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கேளம்பாக்கம் எக்ஸ்பிரஸ் எஸ். எல்லப்பன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி. அன்புசெழியன் திருக்கழுகுன்றம் பேருராட்சி தலைவர் யுவராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி. விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் சிறுதாவூர் டி.ஜெயச்சந்திரன், வடநெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னரங்கம், கோவளம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர், முட்டுக்காடு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன் , கேளம்பாக்கம் ஊராட்சி தி.மு.க. கிளை செயலாளர் கே. ஏ .டி .அன்பு, திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் கேளம்பாக்கம் வாசுதேவன்,சுற்றுலாத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 8 உலகநாடுகளை சேர்ந்த ஏர்பலூன் பைலட்டுகள் கலந்து கொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்களை பறக்கவிட்டனர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *