செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலில் இதுவரை 52 விருப்ப மனுக்கள்: அண்ணா தி.மு.க. அறிவிப்பு

சென்னை, ஜன.4–

திருவாரூர் இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட இதுவரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 28–ந்தேதி நடைபெறுகிறது.

அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்ப மனுக்களை கடந்த 2 மற்றும் 3–ந்தேதிகளில் தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி இடைத்தேர்தலில் போட்டியிட கடைசி நாளான நேற்று வரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் 13 லட்சம் ரூபாய் விருப்ப மனுக் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *