செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி

Makkal Kural Official

திருவள்ளூர், செப் 10

திருவள்ளூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.112.54 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை வழங்கியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.112.54 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட கலெக்டர் டாக்டர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன்(திருவள்ளூர்), ச.சந்திரன் (திருத்தணி) ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13642 மகளிருக்கு ரூ.112.54 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புகளுக்கான ஆணைகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.51.65 லட்சம் மதிப்பீட்டில் பேக்கரி ஸ்டால் அழகு நிலையம் துணி வியாபாரம் தையல் தொழில் அரிசி வியாபாரம் ஹோட்டல் மளிகை கடை ஆகியவை அமைப்பதற்கான வங்கிக் கடன் உதவிகளும், சமூகநலத் துறை சார்பில் சத்திய வாணி அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் 91 பயனாளிகளுக்கு ரூ 6.62 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினை வழங்கினார்.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ராஜேஷ் குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி, திருவலங்காடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *