செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 9315 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

திருவள்ளூர், ஜூலை 31–

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 9315 நபர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சரின் உத்தரவுப்படி திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் அனைத்து பகுதிகளிலும் போர் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று கண்டறிவதற்காக மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவள்ளுர், திருத்தணி திருவேற்காடு, பூவிருந்தவல்லி நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 26 பரிசோதனை வாகனங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பரிசோதனை வாகனத்தில் 2 மாதிரி சேகரிப்பு அலகுகள் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர் பரிசோதனை காரணமாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவைாயன சிகிச்சை வழங்கியதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2.6 சதவிகிதமாக இருந்து இறப்பு விகிதம், தற்போது 1.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. மாவட்டத்தில் 1,23,806-க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 13481 கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு 9315 நபர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 443 நபர்கள் முமுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 4173 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இன்று மொத்தம் 4000 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *