செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை காண்ணிக்க ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர், செப். 16–

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக, போஷான் அபியான் திட்டத்தில் போஷான் மா 2020 குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திட்ட இயக்குநர் க.லோகநாயகி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல் (ம) கண்காணித்தல், அனைத்து வட்டாரங்களிலும் வட்டார மருத்துவ அலுவலர்களை சந்தித்து கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முகாம் நடத்துதல் மற்றும் பரிந்துரை செய்தல், இயற்கை காய்கறி தோட்டங்கள் மேம்படுத்துவதற்கான பெருந்தோட்ட இயக்கம், அனைத்து கிராம பஞ்சாயத்து, நகராட்சி, பேரூராட்சிகளில் சமுதாய இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் (ம) அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இயற்கை காய்கறி தோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று தொிவிக்கப்பட்டது.

மேலும், சமூக நலத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை, மனித வளம் மேம்பாடுத் துறை, வனத் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து, செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறையினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் பெ.ராஜராஜேஷ்வரி, அனைத்து குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *