செய்திகள்

திருவள்ளூர் தொகுதியில் பி.வி. ரமணா கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்

திருவள்ளூர், மார்ச் 23–

திருவள்ளூர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாபளர் பி.வி. ரமணா கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளரும், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா, கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர், வெள்ளேரிதங்கள் , பாப்பரம்பாக்கம், கொப்பூர், புதுவள்ளூர், இலுப்பூர், வலசைவெட்டிக்காடு, போளிவாக்கம், மேல்நல்லத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்த வேனில் சென்று அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருக்கு பட்டாசுகள் வெடித்தும், சால்வை அணிவித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.வி. ரமணா வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், கடம்பத்தூர் ஒன்றியகுழு பெருந்தலைவர் சுஜாதா சுதாகர், மாவட்ட நிர்வாகிகள் சிற்றம் ஜெ.சீனிவாசன், எஸ். ஞானகுமார், எம் .நரேஷ்குமார், காசி, சரவணன், ராமஞ்சேரி மாதவன், ஒன்றிய நிர்வாகிகள் ரஜினி, இன்ப நாதன், வலசை சந்திரசேகர், வலசை ஜெயராமன், செஞ்சி பாலு செல்வம், ராஜ்குமார், ஒன்றிய துணை செயலாளர் இந்திரா வரதராஜன், கொப்பூர் வெங்கடேசன், பழனி, ஜெகநாதன், நயப்பாக்கம் சிவகுமார், போளி வாக்கம் மணி, மதிவாணன், குகானந்தம், லட்சுமிபதி, பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் பாலா (எ) பாலயோகி, மாநில நிர்வாகிகள் நா. வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி, மாவட்ட துணை செயலாளர் பா. விஜயகாந்த், ஒன்றிய செயலாளர் விஜயராகவன், கேசவன், பாப்பரம்பக்கம் ரவி, சரவணன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், வலசை சேகர், புரட்சி பாரதம் கட்சி மாநில பொருளாளர் தொழுவூர் மாறன், மாவட்ட பொருளாளர் நயப்பாக்கம் மோகன், த.மா.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *