செய்திகள்

திருவள்ளூரில் சிறுதானிய உணவு பொருள் கண்காட்சி திருவிழா

Makkal Kural Official

திருவள்ளூர், நவ. 6

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழாவில் மகளிர் சுய உதவிகுழுக்களால் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கலெக்டர் டாக்டர். த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவின் நோக்கம் என்னவென்றால் மக்களிடையே சிறுதானிய உணவுகளை உட்கொள்ளப்படும் சூழ்நிலை மாறிவரும் இந்த வேளையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்கள் உட்கொள்வதால் அதன் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை கொண்டு உங்களின் திறமைகளை வளர்த்து வாழ்வில் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் காட்சிப்படுத்துவது மட்டுமல்லாமல் உங்களின் திறமைகளை வளர்த்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழாவில் மகளிர் சுய உதவிகுழுக்களால் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவினை சிறப்பான முறையில் காட்சிபடுத்தப்பட்டு முதல் இடங்களை பிடித்த திருவள்ளுர் ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவி குழுகளுக்கு ரூ.5000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் இரண்டாம் இடம் பிடித்த திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவி குழுகளுக்கு ரூ.4000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் மூன்றாம் இடம் பிடித்த ஆர்.கே,பேட்டை ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவி குழுகளுக்கு ரூ.3000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், சிறப்பு பரிசாக கும்மிடிப்பூண்டி,பள்ளிப்பட்டு, ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவி குழுகளுக்கு ரூ.2500 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் ஆறுதல் பரிசாக பூவிருந்தவல்லி, திருத்தணி, பூண்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவி குழுகளுக்கு ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *