செய்திகள்

திருவண்ணாமலை நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேவூர்.எஸ். ராமச்சந்திரன் துவக்கினார்

திருவண்ணாமலை பிப். 11–

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3600 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பில் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் அமைச்சர் சேவூர்.எஸ். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், விண்ணமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018–-2019 ஆம் ஆண்டு கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பின் திட்டம் சார்பாக 3600 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் பேசியதாவது

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சர் முன்னிலையில், துணை முதலமைச்சர் ஆற்றிய உரையில், 2019-–2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்காக விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.49.32 கோடி நிதி ஒதுக்கீடும், விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கீடும், தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ‘அசீல்’ இன நாட்டுக்கோழி வளர்ப்பினை மேலும் ஊக்கப்படுத்துவற்காக ரூ.50.00 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்கள். மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் உட்கட்டமைப்பை பெருமளவில் வலுப்படுத்துவதற்காக கால்நடை நிலைய கட்டடங்கள் கட்டுமானத்திற்காக ரூ.60.27 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

ஊரக புறக்கடை கோழி திட்டத்தினை கிராமப்புற பெண்களுக்கு குறுகிய காலத்தில் “வாழ்வாதார வழிவகைகளை உருவாக்கிடவும்”, ஆற்றல் மிக்கவர்களாக மாற்றிடவும், தொலைநோக்கு பார்வையில் தொழில் முனைவோராக உருவாக்கிடச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத வயதான 50 “அசீல்” எனப்படும் நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வல்லூறுகளிடமிருந்தும், நாய், பூனை போன்ற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்து கொள்ளவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக பராமரித்திடவும், ஒவ்வொரு பயனாளிக்கும் இரவு கூண்டுகள் வழங்கப்படுகிறது. இத்திட்டதின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் திட்டம் குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2018-–2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பயனாளிகள் வீதம் 3600 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 30 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பலான ஊரக புறக்கடை கோழி வளர்ப்பின் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது. இக்கோழி குஞ்சுகளை நன்கு பராமரித்து வந்தால், கோழிகளின் உற்பத்தி திறன் காலத்திற்குள் சுமார் 2000 முதல் 2500 வரை முட்டைகள் பெற இயலும். இவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரையிலான வருவாய் கிடைக்கும். மேலும், சேவல்கள் மற்றும் வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்வதன் மூலமும்; கூடுதலாக ரூ.7000 முதல் ரூ.10,000 வரையில் இத்திட்டத்தின் மூலம் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக கோழிஞ்சுகளை வளர்ப்பதின் மூலம் நீடித்த நிலையினையும், “இரட்டை வருவாயினையும்” கண்டிப்பாக அடைய முடியும்.

தமிழக மக்களின் முன்னேற்றத்திறகாகவும், வளர்ச்சிக்காகவும், குறிப்பாக பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மாவின் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக கோழிகளுக்கு ஏற்படும் கோழி காய்ச்சல் நோய் தடுப்பதற்கான இலவச தடுப்பூசி முகாமினை விண்ணமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். மேலும், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.முகமது காலித், துணை இயக்குநர் மரு.ராஜேந்திரன் வேலூர் & திருவண்ணாமலை ஆவின் துணைசேர்மன் பாரி.பி.பாபு மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம். எம். வேலு நகர செயலாளர் எ. அசோக்குமார் ஆரணி ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி. சேகர் வழக்கறிஞர்.கே. சங்கர் ஜி.வி.கஜேந்திரன் அ.கோவிந்தராசன் எஸ்.சுந்தரமூர்த்தி பிஸ்கட்.கே.குமரன் அகிலேஷ்.பி.ஜி.பாபு வேலப்பாடி.எஸ்.பி. சரவணன் பையூர்.ஆர். சதீஷ்குமார் காந்திநகர். விநாயகம் இ.பி.நகர். குமார் மருசூர் ஊராட்சிகழகசெயலாளர் திருஞானம் சித்தேரி ஜெகன் ஒன்றிய பிரதிநிதி. புலவன்பாடி ஆர்.சுரேஷ்ராஜா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *