செய்திகள்

திருவண்ணாமலை கோயில் உண்டியல் வசூல்: ஆடி மாதத்தில் ரூ.3 1/2 கோடி

Makkal Kural Official

திருவண்ணாமலை, ஜூலை 27–

திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை 305 கிராம் தங்கத்துடன் ரூ.3 கோடியே 46 லட்சம் வசூலாகி இருந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆடி மாதத்திற்காக பௌர்ணமி கிரிவலம் நிறைவடைந்தது. இதில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் மட்டுமின்றி பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஆடி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நடைப்பெற்றது.

பணத்துடன் தங்கம் வெள்ளி

கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, கோயில் உண்டியலில் ரூ.3 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 541 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 305 கிராம் தங்கம், 1.492 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.

பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *