செய்திகள்

திருமணத்தில் மது அருந்துவதில் தகராறு: சகோதரர்கள் குத்திக்கொலை; 6 பேர் கைது

லக்னோ, நவ. 29–

உத்தர பிரதேசத்தில் நடந்த திருமண ஊர்வலத்தில், திருமணத்தில் கலந்து கொண்டவர்களால் அண்ணன், தம்பி குத்திக் கொல்லப்பட்டுள்ள நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஷாகஞ்ச் வட்டார காவல் அதிகாரி சுபம் தோடி கூறி இருப்பதாவது:–

உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு 11 மணிக்கு ஒரு திருமண ஊர்வலம் நடைபெற்றது. அந்த திருமண ஊர்வலம் கேத்தாசரை நகரத்தை வந்தடைந்த பிறகு, அஜய் பிரஜபதி மற்றும் அவரது சகோதரர் அங்கித் இருவரையும் அதே விழாவில் கலந்து கொண்ட ஆறு பேர் மது அருந்துவதற்காக அழைத்துள்ளனர்.

6 பேரும் கைது

இந்நிலையில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இரண்டு சகோதரர்களையும் 6 பேர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட சகோதரர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். உடற்கூராய்வுக்கு அவர்களின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்ய போலீசார், அடுத்த 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை சிறிய அளவில் என்கவுண்டர் மேற்கொண்டு, கைது செய்துள்ளனர். இதனால் 6 பேரில் மூவரின் கால்களில் துப்பாக்கி காயங்கள் ஏற்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *