சினிமா

‘‘திருமணத்தில் எனக்கு இஷ்டமே இல்லை; திருமணம் செய்ய மாட்டேன்’’ என்கிறார் வரலட்சுமி சரத்குமார்

Spread the love

‘கன்னி ராசி’– விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் . இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்” இயக்குனர் முத்துக்குமரன் என்றார்.

ரோபோ சங்கர் பேசும்போது, வரலட்சுமி இந்தப்படத்தில் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். அது எப்பவாவது தான் அமையும் என்றார்.

இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, ‘இந்தப்படம் தான் எனக்கு முதல் படம். பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. வரலட்சுமி இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் விமல். இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது’ என்றார்.

வரலட்சுமி பேசும்போது, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.

விமல் பேசும்போது, இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் அது வரலட்சுமி என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *