செய்திகள்

திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றி

சேலம், ஜூலை 11–

திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டு களை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்கள் ஒருபுறம் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க இன்னொருபுறம் திருப்பூர் வீரர் கணேஷ் சேப்பாக் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து கொண்டிருந்தார்.

ஆனாலும் இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். சேப்பாக் அணி தரப்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இப்போட்டியில் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ப்ரதோஷ் ரஞ்சன் ஆட்டநாடகனாக தேர்நதெடுக்கப்பட்டார். முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *