செய்திகள்

திருப்பூரில் பைக் மீது கார் மோதல்: 4 பேர் பலி

திருப்பூர், செப். 19–

ருப்பூர் ரங்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

திருப்பூர் ரங்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதன் என்பவர் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.

லிங்கசாமி, மிதுன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஜுவா, மெர்சிகா ஆகியோர் மருத்துவமனையில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *