திருப்பூர், மே 1–
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நர்ஸ் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். தலை, கை நசுங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் மருத்துவமனை சீருடையில் இருந்த அந்த பெண் நர்ஸ் என்பது உறுதியானது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி பயன்படுத்திய கல் உள்ளிட்ட தடயங்களை சம்பவ இடத்தில் இருந்து போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.