திருப்புவனம், ஜூலை 2–
அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் இன்று அண்ணா தி.மு.க. – பாஜக இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் படுகொலையின் பின்னணியில் உள்ள திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும், அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இணைந்து ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருந்தார். மேலும் திருபுவனம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அண்ணா தி.மு.க. – பாஜக இணைந்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பாஜக சார்பில் எச்.ராஜா மற்றும் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.