சிறுகதை

திருப்பிக் கேட்டால் – ராஜா செல்லமுத்து

ரஞ்சித், ராகவன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் இருப்பவர்கள்.

அதனால் அவர்களுக்குள் எதுவும் ரகசியம் இருந்ததில்லை. இருவரின் அந்தரங்க விஷயம் முதல் அத்தனை விஷயங்களும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள்.

இருவரும் ஒருவருக்கொருவர் கடன் கொடுப்பதும் வாங்குவதும் இல்லை. டீ சாப்பிடுவது முதல் பெரிய செலவுகள் வரை ஏதாவது இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள்.

ரஞ்சித் கொடுப்பதற்கு முன் ராகவன் கொடுப்பான் .ராகவன் கொடுப்பதற்கு முன் ரஞ்சித் கொடுப்பான்.

இதனால் இருவருக்கும் பரஸ்பரம். அன்பு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது .

ஒரு நாள் ரஞ்சித்திற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எல்லோரிடமும் கேட்டுப் பார்த்து ரஞ்சித் கேட்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த ராகவனிடம் கடன் கேட்டான்.

இதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா? நான் பணம் தரேன் என்று கொடுத்தான்.

இல்ல ராகவன் நான் உன்கிட்ட பணம் கேட்கக் கூடாதுன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

பணம்தான் எல்லா பிரச்சனைக்கும் மூல காரணமாக இருக்கு.அதனால இந்த உதவிய நான் மறக்க மாட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல பணத்தை திருப்பித் தரேன் என்றான் ரஞ்சித்.

இது பெரிய விஷயம் இல்ல .நீ திருப்பிக் கொடுக்கலாம் என்றான் ராகவன்.

பேசியபடியே வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தான் ரஞ்சித்.

ஒரு முறை கடன் வாங்கினால் திரும்பத் திரும்ப கேட்க சொல்லும் என்பதைப் போல மறுபடியும் ரஞ்சித்திற்கு பணம் தேவைப்பட்டது.

அதற்கும் ராகவன் கொடுத்து உதவினான். சொன்ன தேதியில் பணத்தை கொடுத்தான் ரஞ்சித்

ராகவனுக்கு அது பெரிதாக எதுவும் தோன்றவில்லை.

அடுத்த முறை இரண்டு முறை வாங்கியதை விட இந்த முறை கொஞ்சம் அதிகமாக பணம் கேட்டான் ரஞ்சித்.

நண்பனின் பேச்சை தட்ட முடியாத ராகவன் நீ கேட்கும் தொகை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது பார்க்கலாம் முடிந்தால் தருகிறேன் என்று சொன்னான் ராகவன்.

இல்ல இந்த டைம் நீ கொடுத்துத்தான் ஆகணும். இந்த உதவியை செய் என்றான் ரஞ்சித்.

இல்ல ரஞ்சித் கொஞ்சம் கஷ்டமான தொகை. நான் பார்க்கிறேன் என்றான் ராகவன் .

நாட்கள் உருண்ட ஓடின. அவன் சொன்னதுபடியே ரஞ்சித் பணம் கேட்டான்

இல்ல ரஞ்சித் ,என்னிடம் நீ கேட்ட பணம் இல்ல என்று கைவிரித்தான் ராகவன்.

அதுவரையில் நேர்மையாக இருந்த நட்பு வளையம் இப்போது வளைந்தது. நீயெல்லாம் பணத்த வச்சிட்டு இல்லைன்னு சொல்லிட்ட இது தவறு. நீ நண்பன் இல்ல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ரஞ்சித்,

அது முதல் ராகவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டான் .

என்ன ரஞ்சித் இப்ப எல்லாம் நீ பேசுறது இல்ல என்று ராகவன் கேட்டபோது,

இல்லயே நான் நல்லா தான் இருக்கேன் என்று உதட்டளவில் சொன்னானே ஒழிய உள்ளத்தில் இருந்து பேசவில்லை என்பதாக ராகவனுக்கு தெரிந்தது.

அதிலிருந்து ரஞ்சித் – ராகவன் உறவு கொஞ்சம் கொஞ்சமாக விரிசலடைந்தது .

இப்போது பெரிய இடைவெளியே வந்தது. இருவரும் ரத்தமும் சதையுமாக இருந்தவர்கள் இப்போது வேறு வேறாக பிரிந்து இருந்தார்கள்.

இரண்டு முறை பணம் வாங்கிய போது நண்பனாக தெரிந்த ராகவன், ஒருமுறை பணம் இல்லை என்று சொன்னதும் பகைவனாக மாறிவிட்டான்.

இதுதான் பணம் செய்யும் பாடு ஒருவேளை இரண்டு முறையும் நாம் ரஞ்சித்திற்கு பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் எப்போதும் போல நண்பர்களாக இருந்திருக்கலாம் என்று நினைத்தான் ராகவன்.

பணம் நல்ல உறவுகளை கெடுக்கும். சில பிரச்சனைகளை உருவாக்கும் என்பது உண்மைதான் என்று அறிந்து கொண்டான் ராகவன்.

இப்போதெல்லாம் ராகவன் , ரஞ்சித் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *