செய்திகள்

திருப்பரங்குன்றம் கோயிலில் 11–ம் தேதி தை அமாவாசையில் தங்கதேர் புறப்பாடு

திருப்பரங்குன்றம், பிப். 8–

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 11–ம் தேதி தை அமாவாசை தினத்தில் தங்கத் தேர் புறப்பாடும் 19–ம் தேதி மாசி கார்த்திகை தினத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியையும் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25–ம் தேதியிலிருந்து கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும் கோயில்கள் திறக்கப்பட்டு 6 கால பூஜை நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவித்து, கடந்த ஜூன் 1–ம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளித்தது. இருப்பினும் திருப்பரங்குன்றம் கோயிலில் மூலஸ்தானத்தில் சுவாமியின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் அர்ச்சனை உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதையடுத்து சில நாட்களுக்கு முன் வேலுக்கு பாலாபிஷேகம் அர்ச்சனை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தங்கத் தேர் உலாவுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஓராண்டாக தங்கத் தேரோட்டம் நடைபெறாத நிலையில் கோயில் நிர்வாகத்தினர் தேரில் சுவாமி இல்லாமல், திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து சோதனை ஓட்டம் நடத்தினர்.

எனவே ஓராண்டுக்குப் பின்வரும் அமாவாசை தினத்தில் திருவாச்சி மண்டபத்தில் தங்கத் தேரோட்டம் நடத்தவும் கொரோனா நடத்தவும் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள்ளேயே நடைபெற்று வந்த நிலையில் வரும் மாசி மாத கார்த்திகை தினத்தில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *