செய்திகள்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் நிவாரண உதவி; 1200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி ; காய்கறிகள்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் நிவாரண உதவி;

1200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி ; காய்கறிகள்:

அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

 

சிவகங்கை, ஜூன்.15–

சிவகங்கை மாவட்டத்தில் 1200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி ; காய்கறிகள் ஆகியவற்றை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் 1200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ காய்கறிகள் வழங்கி தெரிவிக்கையில்:–

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பிள்ளையார்பட்டி, டி.புதுப்பட்டி, புதூர், ஆகிய ஊராட்சிகளில் பாம்கோ கூட்டுறவு விற்பனை பண்டகசாலை சங்கத்தலைவர் நாகராஜனின், சொந்த நிதியிலிருந்து வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறி வழங்கிடும் வகையில் இன்று 1200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ காய்கறிகள் வழங்கியதுடன் பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

அதனைப் பெற்று பயன்பெற்று கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன். ஓவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை கேட்டறிந்து மேற்கண்ட கோரிக்கைகளை துறைஅலுவலர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்மென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொன்.பாஸ்கரன், பாம்கோ கூட்டுறவு விற்பனை பண்டகசாலை சங்க துணைத்தலைவர் மெய்யப்பன், மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *