செய்திகள்

திருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா

திருப்பதி, ஜூலை 8

திருப்பதியில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் 12ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. முதலில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 1 ம் தேதி முதல் நாளொன்று 12500 பக்தர்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் திருப்பதி திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அனைவரும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *