தேவஸ்தானம் புதிய அறிவிப்பு வெளியீடு
திருப்பதி, ஜன. 19–
திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் இன்றுடன் (ஜனவரி 19) முடிவடைவதையடுத்து ஜனவரி 20 ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்படத்தக்க வகையில் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 20 ந்தேதி முதல் டோக்கன் இல்லாமல் நேரடி வரிசையில் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ந்தேதி ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன் விநியோகம் கிடையாது. ஜனவரி 19 & 20 ந்தேதிகளில் ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ஆஃப்லைனில் கிடைக்காது. விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சிபாரிசு கடிதத்துடன் வருபவர்களுக்கும் அனுமதி இல்லை.
இலவச தரிசன முறை
ஜனவரி 20 ந்தேதி முதல் நடைமுறை மாறி, திருப்பதி பழைய இலவச தரிசன முறைக்கு திரும்புகிறது. பக்தர்கள் பொதுவான சர்வ தரிசன வரிசையில் நேரடியாக சென்று திருவெம்பாவை தரிசனம் செய்யலாம். டிசம்பர் மாதமே முன்பதிவு செய்யப்பட்ட ரூ.300 தரிசனம் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் மூலம் பக்தர்கள் கடந்த 10 நாட்களில் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்யுதுள்ளனர் என்று கூறியுள்ள திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
அதாவது, கூட்டம் அதிகம்இருக்கும் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் என்பதை அறிந்து, அதற்கு தகுந்தார்போல் பயணத்தை முடிவு செய்து வர வேண்டும். அதிகாலை நேரம் அல்லது மாலையில் வரிசையில் நிற்பது சரியாக இருக்கும். புதிய டோக்கன் விநியோகம் இல்லை என்பதுடன் அதிக கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால் குழந்தைகள், மூத்த குடிமக்கள் பாதுகாப்புடன் வர வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.