செய்திகள்

திருப்பதியில் ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைக்கான சிறப்பு தரிசனம்

தேவஸ்தானம் புதிய நடைமுறை

திருப்பதி, அக். 6–

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கான புதிய நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை, விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சங்களை தாண்டும். இந்த கோயில் உண்டியல் வருமானமும் அதிகம். வெங்கடாஜலபதி கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. பல பக்தர்கள் தங்கள் கடைசி காலத்தில் தங்கள் சொத்துகளை திருப்பதி கோயிலுக்கு உயிலாக எழுதி வைத்து விடுகிறார்கள். அதனால் அவற்றின் மதிப்பு முழுவதுமாக தெரியாது.

இந்த கோயிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு, புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இதனால் அக்டோபர் மாதம் 7,8,14,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துவிட்டது. மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வயதானவர்கள், கைக் குழந்தையை வைத்திருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் தனி வரிசையில் எளிதாக சென்று ஏழுமலையானை காணலாம்.

ஒரு வயதுக்கான நடைமுறை

அதில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்காக நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சன்னதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த தரிசனத்திற்காக ஆதார் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பெற்றோர் மற்றும் குழந்தையின் உடன்பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். உடன் வரும் உறவினர்களுக்கு அனுமதி கிடையாது.

தகுதியுடைய பக்தர்கள் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மாதத்தில் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த தரிசனத்திற்கு டிக்கெட் அல்லது முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. சிறப்பு விழா, பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

C

தேவஸ்தானம் புதிய நடைமுறை

–––––––––––––––––––––––––––––––––––––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *