செய்திகள்

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

திருப்பதி, மே.28–

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் திருமலைக்கு வந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி திருமலையில் இரவு வராகசாமி, ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.

பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *