செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி, ஜூலை 9–

திருப்பதி கோயிலில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளதால், 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டுள்ள பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

4 கிலோ மீட்டர் வரிசை

தற்போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். பாத யாத்திரை வரும் பக்தர்கள் அதிக அளவில் வருவதால், பக்தர்களை தங்கும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 குடோன்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதனால் சுமார் 24 மணி நேரம் காத்திருந்தும், 4 கிலோமீட்டர் நீண்ட வரிசையிலும் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 73,358 பேர் தரிசனம் செய்தனர். 41,900 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.11 கோடி கோயில் உண்டியலில் காணிக்கையாக வசூலாகியுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *