செய்திகள்

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி, அக்.4–

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

புரட்டாசி மாதம் அவருக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வரும் டிசம்பர் மாதம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

நேரடி இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் பக்தர்கள் வைகுந்தம் கியூகாம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் உள்ள 18 அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.

இதனால் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 79,365 பேர் தரிசனம் செய்தனர். 25,952 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *