செய்திகள்

திருநெல்வேலியில் 2500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

Spread the love

திருநெல்வேலி, மார்ச்.29–

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து திருநெல்வேலிக்கு வந்த 2500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுபடுத்துதல் தொடர்பாக மாநகராட்சி சார்பாக முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தௌிக்கும் பணிகள் தற்காலிமாக காய்கறிகள் கடைகள் தனிமைபடுத்தப்பட்டோர் இல்லங்களில் நில வேம்பு குடிநீர் வழங்கும் பணிகளும் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் தொடர்ந்து நடைபெற ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களிடம் தொிவித்ததாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுபடுத்துவதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது பொது போக்குவரத்து, பொழுதுபோக்கிலிருந்து பொதுமக்கள் கூடும் இடங்களை போன்றவை முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதி கூடுதலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வௌிநாடுகள் மற்றும் வௌிமாநிலகளிலிருந்து வந்துள்ள 2500 நபர்கள் இல்லங்களில் தனிமைபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் இல்லங்களை விட்டு அன்றாட தேவை பொருட்களை வாங்க வௌியே வரக்கூடாது என்ற அடிப்படையில் வீட்டிற்கே சென்று பொருட்கள் வழங்கும் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காய்கறிகடைகளும் தற்காலிகமாக பொதுமக்கள் நலன் கருதி இருப்பிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி கடைகளில் குறிப்பிட இடங்களில் நின்று காய்கறி பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவுறுத்தலின்படி 14 நாட்கள் தொடர்ந்து நில வேம்பு குடிநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

மேலும் விபரங்களுக்கு 24 மணி நேரம் அவசர கட்டுபாட்டு அறை எண்.1077 அல்லது 0462-2501070 வாட்ஸ்ப் எண்: 6374013254, 6374001902 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொிவித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாநகர நல அலுவலர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *