சிறுகதை

திருட்டு – ராஜா செல்லமுத்து

இரண்டு மூன்று நாட்கள் வெளியூருக்கு போய் திரும்பி வந்த பாலுவின் வீடு எந்தவிதமான திருட்டுப் போவதற்கான அடையாளம் இல்லாமல் திருடு போயிருந்தது. வைத்த பொருள்கள் வைத்தபடியே இருந்தன . அவர்கள் எப்படி எல்லாம் விட்டுப் பொருட்களை வைத்து போயிருந்தார்களோ? அந்த பொருட்களெல்லாம் அப்படி அப்படியே இருந்தன.

வீடு சேதாரம் இல்லாமல் இருந்தது.

வீட்டின் கதவுகள், பீரோ கதவுகள் எல்லாம் திறந்து பணம், நகை பொருட்கள் திருடு பாேனது மர்மமாக இருந்தது .

இப்படியும் ஒரு திருட்டா ? எங்களுக்கு இது ஆச்சரியமா இருக்கு. நீங்க ஊருக்கு போகும் போது சாவியை வேற யார்கிட்டயாவது கொடுத்துட்டு போனீங்களா? என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் .

இல்லை என்றார் பாலு

நாங்க இந்த சாவியக் கையோடு கொண்டு போய்ட்டோம். பக்கத்துல கொடுத்துட்டு போற அளவுக்கு யாரும் உறவுகள் இல்ல. அதனால தான் நாங்க சாவியை எடுத்துட்டு போயிட்டோம் என்றார் பாலு.

அப்படி இருக்கும்போது எப்படி இந்த திருட்டு நடந்தது? என்று போலீஸ்காரர்களுக்கு விளங்காத விடையாக இருந்தது .

சிசிடி கேமரா அந்தப் பகுதியில் இல்லாததால் யார் வந்து போனார்கள் என்று கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது .

என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த திருட்டுக்கான பிடி ஒன்றுகூட கிடைக்கவில்லை.

சாவியை யாரிடமாவது கொடுத்தீர்களா ? என்று கேட்டதற்கு

இல்லை என்றே பாலுவிடம் இருந்து பதில் வந்தது.

வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள் என்று யாரும் வீட்டில் இல்லாததால் யார் மீதும் அவர்களுக்கு சந்தேகம் வரவில்லை. சந்தேகப்படும் அளவிற்கு அவர்கள் யாருடனும் நெருங்கி பழகவில்லை.

போலீஸ்காரர்கள் மண்டையைக் குழப்பக் கூடியதாக இருந்தது இந்த பிரச்சனை .

எப்படி யார் வந்து இவ்வளவு நூதனமாக திருடி இருப்பார்கள்? என்று அவர்களுக்கு விளங்காத விடையாக இருந்தது .

சரி மொத்த சாவி எத்தனை? என்று கேட்டார் போலீஸ்காரர் .

அஞ்சு என்றார் பாலு .

வேறு எங்கேயாவது சாவியை கொடுத்தீர்களா ? என்று கேட்டபோது தான் பாலுவுக்கு சுரீர் என்று உரைத்தது.

எஸ் சார் ஒரு நா டூப்ளிகேட் சாவி போடுறதுக்காக நான் ஒரு கடைக்கு போயிருந்தேன். அங்க கம்ப்யூட்டர் சாவி பண்ணி தர்றதா ஒரு கடையில போர்டு இருந்தது .அங்க தான் டூப்ளிகேட் சாவி போட்டேன். ஒருவேளை அவங்க ஏதும் தப்பு பண்ணி இருக்கலாமா? என்று பாலு சொன்னபோது

போலீஸ்காரர்களுக்கு ஏதோ ஒரு பிடி கிடைத்ததாக தெரிந்தது.

அந்தக் கம்ப்யூட்டர் சாவி கடையை நோட்டமிட்டார்கள்.

ஒரு நாள் அந்த கம்ப்யூட்டர் சாவி கடையில் சாவி செய்வது போல போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில்லாமல் சாவியை கொடுத்துவிட்டு அங்கே நின்று ஏதோ பேசுவது போல இருந்தார்கள்.

பணம் கொடுத்ததற்கு பணம் வேண்டாம் கூகுள் பிளே பண்ணுங்கள் என்று சொன்னான் கடைக்காரன் .

எதுக்கு என்கிட்ட பணம் இருக்கு? வாங்கிக்கங்க என்று சொன்னபோது,

இல்ல சார் பணம் கையில வச்சுக்கிறது நல்லதில்ல. கூகுள் பே பண்ணுங்க என்று சொன்னபோது அங்க இருந்த கூகுள் பேயில் ஸ்கேன் பண்ணி பணத்தை போட்டார் ஒரு பாேலீஸ்

அந்த கூகுள் பேயில் பாேலீஸ்காரர் நம்பர் பதிவானது.

அவர் நின்று பேசும் போது ஒரு வாரம் வீட்டில் இல்லை . வெளியூர் போகிறோம் என்று பேசியதை வைத்துக் கொண்ட கம்ப்யூட்டர் சாவி தயாரிக்கும் நபர்கள்,

கூகுள் பே நம்பரை எடுத்து அவரின் வீடு எங்கு இருக்கிறது? என்பதை அவர் கொடுத்த நம்பரில் இருந்து தெரிந்து கொண்டார்கள்.

ஓர் இரவு போலீஸ்காரன் பேசியது உண்மை என்று நம்பிய கம்ப்யூட்டர் சாவிக்காரன், நண்பர்கள் திருட போனார்கள்.

அத்தனை பேரையும் பிடித்தார்கள்.அவர்கள் உண்மையை உளறினார்கள்.

இதுவரை 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் சாவி செய்யும் ஆட்கள் பேசும் தோரணையில் அவர்கள் நடவடிக்கை வைத்து பணம் வேண்டாம் கூகுள் பேயில் பணம் அனுப்பச் சொல்லி அந்த நம்பரை வைத்து அட்ரஸ் கண்டுபிடித்து அவர்கள் இல்லாத நேரத்தில் திருடியது அத்தனையும் ஒத்துக் கொண்டார்கள்.

இப்போது பாலுவின் வீட்டில் நடந்த திருட்டுக்கு ஒரு விடை கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published.