செய்திகள்

திருச்செந்தூர் முருகனுக்கு ரூ.55 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கிய பக்தர்

திருச்செந்தூர், மார்ச். 10–

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் மூலவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ரூ.55 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடத்தை உபயமாக செலுத்தினார்.

ஈரோட்டைச் சேர்ந்த முருக பக்தர் தினேஷ் கிருஷ்ணன். இவரது குடும்பத்தினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் மூலவருக்கு தங்க கிரீடம் உபயமாக செலுத்துவதாக வேண்டி இருந்தனர். அதன்படி தினேஷ் கிருஷ்ணன் குடும்பத்தினர் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் உள்துறை அலுவலகத்தில் வைத்து ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1350 கிராம் எடை கொண்ட சிவப்பு சாதா கல் பதித்த தங்க கிரீடத்தை மூலவருக்கு அணிவிப்பதற்காக கோயில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் செல்வராஜ், உள்துறை சூப்பிரெண்ட் மாரிமுத்து, ஸ்தலத்தார் பாலசுப்ரமணியம், திருமேனி காவல் சின்ன முத்துசாமி நகை மதிப்பீட்டு குழுவினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *