திருச்செந்தூர், ஏப்.1–
கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கோடை விடுமுறையும் வருதால், அதிக அளவிலான கூட்டம் கோவிலுக்கு வரும் என்று தெரிகிறது. தற்போது கோடை காலம் என்பதால் அதிக அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை என 3 நாட்கள் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடையில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க வேண்டி சிறப்பு தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் பலியான நிலையில், பக்தர்களின் நலன் கருதி இந்த முடிவை கோவில் நிர்வாகம் எடுத்துள்ளது.
![]()





