செய்திகள்

திருச்சி மண்ணச்சநல்லூர், இலால்குடி, மணப்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருச்சி மண்ணச்சநல்லூர், இலால்குடி, மணப்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருச்சி,ஏப்.3 –

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர், இலால்குடி மற்றும் மணப்பாறை வட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊரக வளர்ச்சித்துறை ,சுகாதாரத்துறை, மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு சோப்பு போட்டு கை கழுவுவது, மாஸ்க் அணிவது, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு அங்கு வசிக்கும் பொது மக்களிடம் கைகளை

சோப்பு போட்டு கழுவவேண்டும், வெளியில் நடமாடக்கூடாது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு பொது மக்களுக்கு அறிவுறித்தினார்.

இதனை தொடர்ந்து அண்ணா நகர் காய்கறி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு தடையில்லாமல் நியாயமான விலையில் காய்கறி கிடைக்கிறதா என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் .பி.சிவபாதம், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முருகேசன், மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அழகுமணி, இலால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *