செய்திகள் வாழ்வியல்

திருச்சி திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில்

Spread the love

அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம், திருச்சி மாவட்டம்.

இந்த திருக்கோவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநெடுங்குளம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சைக்கு அருகாமையிலும் உள்ளது.

திருஞானசம்பந்தரால் திருநெடுங்களம் என்னும் பதிகம் வாயிலாக பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற தலம் என்பது இதனுடைய சிறப்பு.

அவரவர்கள் செய்த முற்பிறவியின் பலன்கள் இந்தப் பிறவியில் அவர்களை வந்து அடையும் என்பது திருமந்திரம் மூலம் திருமூலர் அவர்கள் தெரிவித்து அதைப்பற்றி தெளிவாக தனது திருநெடுங்குளம் என்ற பதிகத்தின் பாடலின் மூலம் கூறியுள்ளார்.

இந்த திருத்தலத்தின் மகிமையே இந்த தலத்தில் அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகிய தீர்த்தக்குளத்தில் குளித்து இந்த தலத்து சிவபெருமானைத் தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில், நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வணங்க அந்த பக்தர்களுக்கு முகப்பொலிவு கூடும் சகல காரிய சித்தியும் இவர்களைப் பார்த்தவுடன் மக்கள் இவர்கள் வசம் வசியம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த தல வரலாறு பற்றி அறியும் பொழுது சனீஸ்வரரை மகன் குளிகன் இவர் தினமும் ஒன்றரை மணி நேரம் குளிகை என்ற நேரத்தை அவர் வசம் வைத்து வலம் வருகிறார். இந்த குளிகை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யும் பொழுது அவை அனைத்து காரியங்களும் பல்கி பெருகி சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் குளிகை நேரத்தில் அசுப காரியங்களைத் செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் சுப காரியங்களை குளிகை நேரத்தில் செய்தால் அதே போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து அவர்களுடைய வாழ்விலே நடக்கும் என்பதும் ஐதீகம்.

ராகு காலத்தில் துர்கா தேவிக்கு விளக்கு ஏற்றும் பழக்கம் உள்ளது. அதேபோன்று சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்க குளிகை நேரத்தில் பைரவரை வழிபட்டு அவருக்கு விளக்கேற்றி பூஜை செய்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும் என்பது நம்பிக்கை இந்த வழக்கம் இந்தத் தலத்தில் அருள்மிகு நெடுங்களநாதர் கோவிலில் காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது.

சிவபெருமான் தனக்கு இடது பாகத்தினை பார்வதி தேவிக்கு ஒதுக்கி கொடுத்தவர் அதனால் இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் உண்டு மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் சிவபெருமான் இந்த திருக்கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் பார்வதி தேவிக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருப்பது அதிசயமான ஒரு சிறப்பான அம்சமாகும். இங்கு கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். திருநெடுங்குளம் என்பதன் என்பதன் பொருள் சமவெளியில் அமைந்த பெரிய ஊர் என்று பொருளாகும் அன்னை பார்வதி தேவி சிவனை நோக்கி இந்த திருக்கோவிலில் தவம் இருந்தாள் .அவளது தவத்தை மெச்சிய சிவபெருமான் பார்வதிதேவியும் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார் என்பது கூறப்படுகிறது. இங்குள்ள சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

காசிக்கு அடுத்தபடியாக இந்த திருத்தலத்தில் மட்டுமே இப்படி உள்ளது. உற்சவராக சோமாஸ்கந்தர் வலது கை கட்டை விரல் இல்லாமல் இருக்கிறார். இதனுடைய காரணம் ஒரு தடவை மாறு வேடம் கொண்டு ஒரு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினாராம். இதை அறிந்த அரசன் அவரது விரலை துண்டித்து விட்டார் என்று கூறப்படுகிறது. 2000 ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோவிலில் சம்பந்தர், அருணகிரிநாதர், ஆகியோர் சிவன் புகழைப் பாடி தெளிவுபடுத்தியுள்ளனர்.

அகத்தியரும் இங்கு வந்து பூஜை செய்து உள்ளதாக ஐதீகம். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது எட்டாவது தலமாக கூறப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் வருடம் பழமை வாய்ந்த மிகவும் பெருமை பெற்ற திருக்கோவில் ஆகும்.

இங்கு பிரதோஷ தினங்களில் வெகு சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. சிவராத்திரி மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் ஏழாம் தேதி முதல் 12 –ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி பூஜை மிகச் சிறப்பான அம்சமாக வழிபாடு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது விழுவது மிகவும் சிறப்பான அதிசயமான அம்சமாகும்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறவும் குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, இந்த திருத்தலத்தில் வந்து சிவபெருமானையும் அரூபமாக வீற்றிருக்கும் மங்களாம்பிகை என்ற ஒப்பிலா நாயகியை வணங்கி வழிபட தங்களது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்று கூறுகின்றனர். தங்களது வேண்டுகோளை ஏற்று விருப்பங்கள் நிறைவேறிய பின்பு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

தினமும் நான்கு கால பூஜையுடன் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்து உள்ளது.

அருள்மிகு திருநெடுங்களநாதர் நித்திய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருநெடுங்குளம்– 620 015, திருச்சி மாவட்டம்.

தொலைபேசி எண் – 0431 – 2520126, 2510241, 996545666

மலை புரிந்த மன்னவன்றன்

மகளையோர் பால் மகிழ்ந்தாய்,

அலை புரிந்த கங்கை தங்கும்

அவிர்சடை யாரூரா,

தலை புரிந்த பலி மகிழ்வாய்

தலைநின் தாள் நிழற்கீழ்,

நிலை புரிந்தார் இடர் களையாய்

நெடுங்கள மேயவனே.

–திருஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *