செய்திகள்

திருச்சி-சிங்கப்பூர் இண்டிகோ விமான சேவை முன்பதிவு தொடக்கம்

திருச்சி,ஆக.13–

செப்டம்பர் 16 முதல் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையைத் தொடங்கும் இண்டிகோ விமான நிறுவனம் இணையதளம் மூலம் முன்பதிவைத் தொடங்கியுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் கடந்த ஜூன் மாதம் முதல் திருச்சியில் இருந்து விமான சேவையைத் தொடங்கியது. வரும் செப்டம்பர் 16 முதல் திருச்சி – சிங்கப்பூர் நேரடி சேவை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி அதற்கான முன்பதிவை விமான நிறுவனம் இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது. கட்டணம் ஏறத்தாழ 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகிறது. தினசரி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 3.55 மணிக்கு திருச்சி வரும் இண்டிகோ விமானம், மாலை 6.40-க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.45-க்கு சிங்கப்பூரை சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *