தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருச்சி, ஆக. 1–
திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், நேற்று பல்வேறு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 12 முன்பதிவில்லா பயணிகள் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
12 ரெயில் சேவைகள் ரத்து
அதன்படி, திருச்சி – ராமேஸ்வரம், திருச்சி – ஈரோடு, திருச்சி – தஞ்சை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – விழுப்புரம், திருச்சி – கரூர், திருச்சி – காரைக்கால், அரக்கோணம் – வேலூர் உள்ளிட்ட 12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.