செய்திகள்

திருச்சியில் ஒப்பந்ததாரா்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ஆலோசனை

திருச்சி மாநகராட்சியில்

ஒப்பந்ததாரா்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் ஆலோசனை

 

திருச்சி, மே.8–

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்ததாரா்களுடனான கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகராட்சி ஒப்பந்தக்காரர்களுடன் கொரனா தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தலைமையில் நகரப் பொறியாளர் எஸ். அமுதவள்ளி முன்னிலையில் மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்தக்காரர்களுடன் கொரனா தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன் பேசியதாவது :– அரசாணை எண். 217 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நாள்.3.5.2020 வழிகாட்டுதல்களின் படி மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்தக்காரர்கள் தங்கள் பணியாட்களுக்கு கொரனா தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பணியாட்களுக்கு முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். கைகளை சோப் மற்றும் கைகழுவும் திரவம் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்தபட வேண்டும். பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எற்படுத்த கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம், ஜிங்க் மாத்திரை மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.

பணியாட்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கொரனா தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

மேலும் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் அனைத்தும் தவறாது பின்பற்றப்பட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளின் கொரனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தெளிவாக விளக்கி கூறப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்களது பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனையினை அருகில் உள்ள மாநகராட்சி மருந்தகங்களில் இலவசமாக செய்து கொள்ள வேண்டும் என ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகப்பொறியாளர் ஜி.குமரேசன் மற்றும் அனைத்துக்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், இளநிலைப்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *