செய்திகள்

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் நிறைவு: 86.10% வாக்குகள் பதிவு

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அகர்தலா, பிப். 17–

நேற்று நிறைவடைந்த திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 86.10 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தின் 5 ஆண்டுகால பதவிக்காலம் வரும் மார்ச் 22 ஆகிய தேதி முடிவடைகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

86.10 சதவீத வாக்குப்பதிவு

திரிபுரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிக்கு 5 தொகுதிகளையும் ஒதுக்கி உள்ளது.

அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் கம்யூனிஸ்ட் சார்பில் 46 வேட்பாளர்களும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் 13 பேரும் ஒரு சுயேட்சையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 7 தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 86.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *