செய்திகள்

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமனம்

Makkal Kural Official

சென்னை, பிப். 16–

திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–

திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை டி.பி.எம்.மைதீன் கான், துணைத் தலைவராக வி.ஜோசப்ராஜ், துணைச் செயலாளராக திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த கே.அன்வர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளராக பெரம்பலூரைச் சேர்ந்தகுள்ளம் ராஜேந்திரன், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கே.வி.எஸ்.சீனிவாசன், செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக சென்னையைச் சேர்ந்த சூர்யா கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக திவ்யா சத்யராஜ், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பி.எம்.ஸ்ரீதர், மதுரை பா.ச.பிரபு, கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் வே.தமிழ்பிரியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக மருதூர் ஏ.இராமலிங்கம், துணைச் செயலாளராக கொ.ரமேஷ் (தருமபுரி), இலக்கிய அணி துணைச் செயலாளர்களாக சௌமியன் வைத்தியநாதன் (மயிலாடுதுறை), ஜி.நாகநாதன் ( பரமகுடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம்), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம்), கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளராக எம்.எஸ்.ஹரிபாபு (சென்னை), மாணவர் அணி துணைச் செயலாளராக ஜெ.இராமகிருஷ்ணன் (சிவகங்கை), தொண்டர் அணி துணைச் செயலாளராக சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.எம்.கே.அண்ணாதுரை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என திமுக தலைமைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *