செய்திகள்

திமுக கூட்டணி ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்

சென்னை, மார்ச் 11–

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்க மளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுகவுடனான கூட்டணியை நேற்று முன்தினம் உறுதி செய்தார். இது தொடர்பாக கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:–

பன்முகத்தை காக்கவேண்டும்

இந்தியாவின் பன்முகத்தன்மை தான் அதன் தனித்துவம் என நான் நம்புகிறேன். தற்போதைய நிலை என்பது ஒரு அவசரநிலை. இது, தமிழ்நாட்டுக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு.

இந்த நேரத்தில் எந்த கட்சியில் இருந்தாலும் அனைவருமே சகோதரர்கள் தான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்னுடைய சகோதரர்கள் தான். தேச நலனின் முக்கியத்துவம் கருதி, நான் சிலவற்றை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். தேசத்துக்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அது தான் என்னுடைய அரசியல் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *