செய்திகள்

திமுக–காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: ஜனவரி 28 ந் தேதி பேச்சுவார்த்தை

சென்னை, ஜன. 24–

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

கூட்டணி கட்சிகள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுள்ளன. மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும் இடம்பெறும் எனவும் எதிர்பாா்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக திமுக, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *