செய்திகள்

திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கைது: தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு

Spread the love

சென்னை, மே. 23 –

திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி இன்று கைது செய்யபட்டார்.

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை நீதிபதி ஜாமீனில் விடுதலை செய்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வீடு சென்னை ஆலந்தூரில் இருக்கிறது. இவர் கடந்த பிப்ரவரி 15 ந் தேதி தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திமுக செய்த சாதனைகளை எடுத்துக் கூறிய போது தவறாகப் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் போலீசில் புகார் கூறியிருந்தார். அதில் பட்டியல் இனத்தவர் நீதிபதியாக முடிந்தது திராவிடர் இயக்கம் போட்ட பிச்சை என்று என்று ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்ததாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச்சட்டத்தில் கைது செய்தனர். வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று ஆர்.எஸ்.பாரதியை அவர் வீட்டில் கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை நீதிபதி ஜாமீனில் விடுதலை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *