செய்திகள்

திமுக–இந்திய கம்யூ. பிப். 3 ந்தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை, ஜன. 29–

மக்களவைத் தோதலையொட்டி திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்ரவரி 3 ந்தேதி நடைபெறுகிறது.

மக்களவைத் தோதல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று, முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

3 ந்தேதி பேச்சுவார்த்தை

இந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்ததாக திமுகவும், திருப்தியாக இருந்ததாக காங்கிரஸும் தெரிவித்தன. இந்த நிலையில் காங்கிரஸைத் தொடர்ந்து திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை பிப்ரவரி 3 ந்தேதி நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாநில துணைச் செயலர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்ததையில் பங்கேற்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *