செய்திகள்

தினமும் 2 முறை காய்ச்சி ஆறவைத்த பால் குடித்தால் கால் வலி குணமாகும்

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனைகள்


நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும்.

அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும்.

அதில் ஆரம்பத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, பின் நாளாக ஆக தாங்க முடியாத வலியை உண்டாக்கும். கால்கள் வலிப்பதற்கு உடல் பருமன் மட்டும் காரணமல்ல, வேறுசில காரணங்களும் உள்ளன. சில வகையான கால் வலிகள் எரிச்சலூட்டி, மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இன்னும் சில வகை கால் வலிகள் மிகுந்த வலியை உண்டாக்கும்.

கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம்.

பெரும்பாலானோர் சந்திக்கும் ஓரு பொதுவான பிரச்சனை தான் கால் வலி. இந்தக் கால் வலிக்கு எளிய முறையில் வீட்டிலேயே தீர்வு காணலாம். அதுவும் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே ஈஸியாக தீர்வு காண முடியும். இப்போது அந்த இயற்கை வழிகள் எவையென்று காண்போம். ஒத்தடம்

* ஒரு வாணலியில் அரிசியைப் போட்டு சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு மென்மையான துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு வலியுள்ள கால் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

* இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை தொடர்ந்து செய்து வந்தால், கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* நல்ல மாற்றத்தைக் காண இந்த செயலை தொடர்ந்து ஒரு வாரம் தவறாமல் பின்பற்ற வேண்டும். எண்ணெய் மசாஜ்

* 1 டீஸ்பூன் வின்டர்க்ரீன் ஆயிலுடன், 4 டீஸ்பூன் வெஜிடேபிள் ஆயில் மற்றும் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த எண்ணெய் கலவையை பாதிக்கப்பட்ட கால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கால் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* யோகாசனங்களின் மூலம் கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க சர்வாங்காசனத்தை தினமும் செய்வது நல்லது.

அத்துடன் சாவாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றையும் சேர்த்து செய்து வருவது கால் வலிக்கு மிகவும் நல்லது.

* 1- 2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் வலிமிக்க கால்களை 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் இரண்டு முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

* ஒரு பாத்திரத்தில் மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ளுங்கள்.

பின் அதில் 1-2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்பு இந்த பாலை வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள். இப்படி தினமும் 2 முறை என கால் வலி போகும் வரை குடியுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *