செய்திகள்

தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


நல்வாழ்வுச் சிந்தனைகள்


தினமும் தேங்காய் சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம் ஏற்படும் .

கிருமி நாசினியாக விளங்குகிறது

பனிப் பயிரான தேங்காய் இவ்வுலகில் வெப்பமண்டல நாடுகளில் மட்டுமே வளர்கின்றது.

இவ்வுலகில் பல பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அன்றாட உணவிற்கும் மற்றும் மருத்துவத்திற்கும் இளநீர், தேங்காயினை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

அதிக அளவில் ஊட்டச்சத்து உள்ள இயற்கை உணவான தேங்காயினை தினம் தோறும் சாப்பிட்டுவந்தால் நமக்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளின் வெளிப்புறத்தில் நுண் கிருமிகள் உள்ளன.

இவை சமயங்களில் நம்மை தொற்றிக்கொண்டு உடல்நல பாதிப்புகளையும் உண்டாக்கிறது.

தேங்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமி நாசினியாக திகழ்கிறது.

தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மற்றும் லாரிக் அமிலங்கள் நமது இரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். நாம் சாப்பிடும் தேங்காய் உடலில் பரவி இருக்கின்ற நூண் கிருமிகளை அழித்து உடலை தூய்மையாக வைக்கிறது.

–––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *