வாழ்வியல்

தினமும் அரை மணி நேரம் நடந்தால் இதய சம்பந்தமான நோய்கள் வராது

உடல்நலம் சரியில்லாமல் மருந்து உட்கொள்கிறீர்கள் எனில் மருத்துவர் சொல்லும் அளவில் மருந்தை உட்கொள்ளுங்கள். ஒரு வாரம் மருந்து சாப்பிடச் சொன்னால் நோய் குணமானதாய்த் தோன்றினாலும் ஒரு வாரம் சாப்பிடவேண்டும். இல்லையேல் அந்த நோயின் கிருமிகள் முழுதும் அழியாமல் திரும்பவும் வீரியத்துடன் தாக்கக் கூடும்.

* மருந்துகளுக்கு ஏதேனும் எதிர்வினை உண்டா என மருத்துவரைக் கேட்டு தெரிந்து கொள்தல் நலம் பயக்கும்.

* எலுமிச்சை பானம் உடலுக்கு நல்லது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் அது நம்மைப் பாதுகாக்கும்.

* நன்றாக மென்று உண்பதும், கார்பனேட்டட் பானங்களைத் ( கோக், பெப்சி போன்றவை ) தவிர்ப்பதும் அவசியம்.

* மது அருந்துதல், புகை பிடித்தல், மன அழுத்தம் போன்றவை பல்வேறு நோய்களை சம்பாதித்துத் தரும். அவற்றை விலக்குதல் மிகவும் அவசியம்.

* ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று முழு பரிசோதனை ஒன்றைச் செய்து கொள்வது பலன் தரும்.

* தினமும் அரை மணி நேரம் நடப்பது உடல் எடை அதிகரிக்கமல் பாதுகாப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

* தினமும் அரை மணி நேரம் நடப்பது இதய சம்பந்தமான நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது.

* எதையேனும் எடுக்கக் குனியும்போது உட்கார்ந்து எழும்பி எடுப்பது தசைகளை வலுவாக்கும். முடிந்தவரை உடலிலுள்ள தசைகளுக்கு ஏதேனும் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* ஏதேனும் வரிசையில் காத்திருக்க நேர்ந்தால் ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை ஒரு அரை இஞ்ச் தரைக்கு மேலே தூக்கி நில்லுங்கள். இப்படி மாற்றி மாற்றி செய்வது கால்களை வலுவாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *