செய்திகள்

திண்டிவனத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு

விழுப்புரம், ஜூலை 6–

திண்டிவனத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

திண்டிவனத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார் .டி.ஆர்.ஓ., ஸ்ரேயா பி சிங், சப் கலெக்டர் அனு, நகராட்சி கமிஷனர் ஸ்ரீபிரகாஷ், டி.எஸ்.பி., கனகேஸ்வரி, தாசில்தார் ராஜசேகரன் மற்றும் நகராட்சி, சுகாதாரம், போலீஸ் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம், திண்டிவனத்தில் நடந்த தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். பொது மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குறிப்பாக மருத்துவமனைக்கு சளி, காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *