சினிமா செய்திகள்

திடீர் உடல் நலக் குறைவு: நடிகை தீபிகா படுகோனே மும்பை மருத்துவமனையில் அனுமதி

மும்பை, செப்.28–

பிரபல இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே நேற்றிரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்தி திரையுலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடன் நடித்தபோது படப்பிடிப்பு தளத்தில், தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து அவர் உடல் பரிசோதனைக்காக காமினேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து தற்போது உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு அவர் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோருடன் பதான் படத்தில் நடித்துள்ளார். வரும் ஜனவரி 25-ந்தேதி அந்தப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளிவருகிறது. இதுதவிர, நடிகர் ஹிரித்திக் ரோஷன் உடன் பைட்டர் படத்திலும், மற்றும் நடிகர்கள் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *